ஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஒருவர், அணு ஆயுதம் இல்லா உலகிற்காக 75 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல் நடந்த போது 13 வயதான தெருமி தனகா வீட்டின் கீழ் தளத்திற்கு சென்று பதுங்கி உயிர் தப்பினார்.
அணுகுண்டு வெடிப்பிலும் அதை தொடர்ந்த அணுகதிர் வீச்சிலும் உறவினர்கள், அண்டை வீட்டாரர்கள், நண்பர்கள் பலரை இழந்ததையும் தான் சந்தித்த பொருளாதார இன்னல்களையும் சர்வதேச மாநாடுகளில் நினைவுகூர்ந்து, அணு அயுதங்களுக்கு எதிராக தனகா பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தின் ஆதரவாளரான இவர், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அணுகுண்டு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.