கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா உட்பட 31 நாடுகளிலிருந்து விமானப் போக்குவரத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் 31 நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வரவும், தங்கள் நாட்டின் வர்த்தக விமானங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதையும் குவைத் அரசு தடை செய்துள்ளது.
இதில் இந்தியாவை தவிர இலங்கை, நேபாளம், மெக்சிகோ, இந்தோனேஷியா, சிலி, பாகிஸ்தான், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். பல்வேறு நாடுகளில் பயண விதிகள் தொடர்பான நிலைமை மாறும் வரை இந்த தடை இருக்கும் என விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.