அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், டிக் டாக் செயலியை கவனித்துக் கொண்டு இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்கலாம் அல்லது வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிப்பிட்டு, டிக் டாக் செயலியை விற்குமாறு சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவலை தொடர்ந்து அமெரிக்கா - சீனா இடையேயான மோதலின் தொடர்ச்சியாக, இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.