ஆல்கஹால் சானிடைசர் வாங்க முடியாத ஏழை எளியோர்கள், பெட்ரோலை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யுமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை, அவரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின் போது, சானிடைசர் வாங்க இயலாதவர்கள், பெட்ரோல் பங்குகளுக்குச் சென்று, சில துளி பெட்ரோலால் கைகளை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
பிலிப்பைன்ஸில் 90,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதிபர் Rodrigo ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார்.