ஜப்பானின் கோரியாமா நகரில் உணவகம் ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புகுஷிமாவில் என்ற இடத்தில் உள்ள ஒன்யாசாய் உணவகத்தில் புதுப்பித்தல் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுற்றுவட்டாரத்தில் சிதறயடிக்கப்பட்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உணவக நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசாருடன் இணைந்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. திடீரென வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாகவும், வாயு வாசனையை நுகர்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.