அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சரக்கு ரயில் ஒன்று பாலத்தில் தடம் புரண்டதுடன் தீப்பற்றி எரிந்தது. டியூசனில் இருந்து பீனிக்ஸ் சென்ற சரக்கு ரயில் டெம்பே டவுன் ஏரியின் மீது பாலத்தில் செல்லும் போது தடம் புரண்டு தீவிபத்துக்குள்ளானது.
10 பெட்டிகளுக்கு தீப்பரவியதில் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இதில் மூச்சு திணறலுக்கு உள்ளான ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற ரயில் பெட்டிகளுக்கு தீப்பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பசுபிக் யூனியன் செய்தித் தொடர்பாளர் டிம் மக்மஹான் தெரிவித்துள்ளார்.