பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ (Alexander Lukashenko) தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் மருந்து எடுக்காமல் தாமே குணமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெலாரசில் இதுவரை 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதோடு, 543 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அதிபர் அலெக்சான்டர் லுகாசென்கோ, ராணுவ தளபதிகள் மத்தியில் பேசுகையில், கொரோனாவை கண்டு அச்சப்பட வேண்டியதில்லை, கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.
வோட்காவை குடிப்பதாலும், வெப்ப காற்றில் ஓய்வெடுப்பதாலும் (saunas) ஐஸ் ஹாக்கி விளையாடுவதாலும் குணமாகி விடலாம் என்றும் அவர் கூறினார்.