டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள மின்சார வாகனங்களில், பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின்சார வாகன சந்தையில், தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய்க்கும், அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவுக்கும் கடும் போட்டி நிலவி வரும் வேளையில், டெஸ்லா நிறுவனத்தின் Model 3 வாகனத்தின் ஸ்டீயரிங், பிரேக் மற்றும் ஆட்டோ பைலட்டின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், டெஸ்லா கார்களின் ஆட்டோ பைலட் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.