பருவநிலை மாற்றங்கள் கொரோனா பரவலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் இதைத் தெரிவித்தார்.
கோடைகாலத்தில் கொரோனா தொற்று அபாயம் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கை தவறு என அவர் எச்சரித்தார். உலகில் மகவும் மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிலவற்றில் இப்போது மாறுபட்ட பருவநிலைகள் நிலவுவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.