எகிப்தின் கிஜா நகரில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கால்நடை சந்தைகளில் குவிந்தனர்.
கொரோனா தாக்கத்தால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு, பொதுமக்கள் செலவீனங்களை வெகுவாக குறைத்துள்ளதாக தெரிவிக்கும் வியாபரிகள், அரசு அதிகாரிகள் கூட்டம் சேர்வதை தடுத்து வருவதால், வியாபாரம் மேலும் பாதிப்படைவதாக தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான எகிப்தியர்களின் வேலை பறிபோனதால், இந்தாண்டு பக்ரீத் கொண்டாட்டங்கள் கலை இழந்துள்ளதாக அவர்கள் வருந்துகின்றனர்.