கொரோனா வைரஸ் பரவலால் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் சவூதி அரேபியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஹஜ் புனித யாத்திரை ஜூலை 29 ந் தேதி தொடங்கும் என்று சவுதி அறிவித்திருந்தது.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஐந்து மாதங்களாக மெக்காவில் ஹஜ் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் மீண்டும் ஹஜ் பயணத்துக்குச் சவுதி அரேபியா அனுமதியளித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் மட்டுமே மெக்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இந்தப் புனிதப் பயணத்தில் சவூதி மக்களும் அங்குள்ள வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். வெளிநாடுகளிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தொடர்ந்து தடையுள்ளது.
இதனால், ஹஜ் யாத்திரைக்கு முழு வீச்சில் தயாராகிவருகிறது மெக்கா. மசூதி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் 18,490 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெக்கா முழுவதும் 87,900 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தரைதளம் மற்றும் தூண்களில் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர். எத்தகைய, நிலைமையைச் சமாளிக்கும் வகையில் அவசர நிலைக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்...