அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் அருகே தீவு ஒன்றில் ஜொலி ஜொலிக்கும் வகையில் நிறம் மாறும் ஸ்குயிட் மீன் வகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
யூசெப்பா தீவில் தங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ,இதை படம் பிடித்து வெளியிட இணையத்தில் வைரலாகி உள்ளது.
தீவில் முந்தைய நாள் இரவில் கனமழை பெய்ததால், காலையில் தங்கள் படகின் நிலையை காண சென்ற போது ஸ்குயிட் மீன் கரையோரம் கிடந்ததாகவும் அதை மீட்டு கடலில் விட எடுத்தப்போது ஜொலிக்க ஆரம்பித்ததாகவும் சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.