ஹூஸ்டனில் மூடப்பட்டுள்ள சீனத் தூதரகம் உளவு பார்க்கும் மையமாகவும், அறிவுசார் சொத்துரிமைகளைக் களவாடும் இடமாகவும் விளங்கியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தகவல்களைத் திருடியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவர் மீது அமெரிக்க நீதித்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ஹூஸ்டனில் மூடப்பட்டுள்ள சீனத் தூதரகம் உளவு பார்க்கும் மையமாகவும், அறிவுசார் சொத்துரிமைகளைக் களவாடும் இடமாகவும் விளங்கியதாகத் தெரிவித்துள்ளார்.