ஹூஸ்டனில் உள்ள தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா கூறியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
டெக்சாஸ் மாநிலத் தலைநகரான ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை 3 நாட்களுக்குள் மூடிவிட வேண்டும் என அமெரிக்க அரசு கெடு விதித்தது.
அமெரிக்கர்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், இந்தத் தவறான முடிவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், பதிலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
வெள்ளியன்று ஹூஸ்டன் சீனத் தூதரகத்தில் ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோது, தீயணைப்புத் துறையினரை உள்ளே அனுமதிக்கச் சீனத் தூதரக அதிகாரிகள் மறுத்தது குறிப்பிடத் தக்கது.