பிட்காயின் பண இரட்டிப்பு மோசடி விவகாரத்தில், சில ஊழியர்கள் வசமிருந்து ஐடி, பாஸ்வேர்டுகளை திருடி, ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்களின் ட்விட்டர் கணக்குகள் 2 நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டன. ஆயிரம் டாலர் அனுப்பினால், 2 ஆயிரம் டாலர்களாக திருப்பித் தரப்படும் என பதிவிட்ட ஹேக்கர்கள், பிட்காயின் வடிவில் 1 லட்சத்து 20 ஆயிரம் டாலர்களை சுருட்டினர்.
இந்நிலையில், சில ட்விட்டர் ஊழியர்களிடமிருந்து ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை இணையத்தின் மூலம் திருடிய ஹேக்கர்கள், இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி, நிறுவனத்தின் கணினி முறைகளை அணுகியிருக்கலாம் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சைபர் பாதுகாப்பு அமைப்பின் (CERT-In) மூலம், ட்விட்டர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அரசு, இந்தியாவை சேர்ந்த பயனாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டனரா? தகவல்கள் திருடப்பட்டனவா என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.