ஸ்பெயினில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் கழுதைகளும் ஈடுபட்டுள்ளன.
ஹூல்வா மாகாணத்தின் மாதலாஸ்கானாஸ் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை கழுதை மீது கட்டப்பட்டுள்ள கூடைகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சேகரித்து வருகின்றனர்.
வாகனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இதனால் தவிர்க்கப்படுவதாகவும், கழுதைகள் இந்த பணியில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் ஒருங்கிணைப்பாளர் மரியா ஜெசிகா ஹெரேடியா சால்வடோர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வலர்கள் நாள் ஒன்றுக்கு சிலமணி நேரங்களில் 20க்கும் மேற்பட்ட பெரிய பைகளில் குப்பைகளை சேகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.