உலகப் புகழ் மிக்க தலைவர்கள் தொழிலதிபர்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அதை யாரும் ஹேக் செய்யவில்லை என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், அதிபர் டிரம்ப் தொடர்ந்து தமது டிவிட்டர் கணக்கில் நீடிப்பதாக தெரிவித்தார். சமீபத்தில் நிகழ்ந்த சைபர் தாக்குதல்களில் அதிபர் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் பிரிட்டன் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டியுள்ளது குறித்து பேசிய செய்தித் தொடர்பாளர் மிக் எனானி அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் தகவல்களை பாதுகாக்க இணைந்து செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.