அமெரிக்க நிறுவனமாக டிக்டாக் செயல்பட வாய்ப்பு உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.
பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சீனாவின் பைட் டான்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் இருந்து டிக்டாக் வெளியேறி அமெரிக்க நிறுவனமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ தெரிவித்துத்துள்ளார். இது குறித்த இறுதி முடிவுகளை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.