பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
கொரோனா பரவிய தொடக்கத்தில் இருந்து இது சாதாரண காய்ச்சல், இதற்காக பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபரும் முன்னாள் ராணுவ தலைவருமான ஜெய்ர் போல்சனாரோ, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோயிலிருந்து இன்னும் தான் குணமடையவில்லை என்று போல்சனாரோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சில தினங்களில் மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.