மங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆசியாவில் அதிகளவில் காணப்படும் பெரிய கொறித்துண்ணிகளான மர்மோட்டில் இருந்து பிளேக் நோய் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் அவற்றை வேட்டையாடவும் உண்ணவும் மங்கோலியா அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், கோபி-அல்தாய் மாகாணத்தின் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் அவனுடன் தொடர்பில் இருந்த 15 பேரும் மர்மோட் உண்ட மேலும் 2 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மங்கோலியா அரசு தெரிவித்துள்ளது.