கொரோனா வைரசை சாதாரண ஜலதோஷமாக மாற்றக்கூடிய மருந்து கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் நாட்டின் ஹீப்ரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்த ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்ட பேராசிரியர் யாக்கோவ் நாச்சிமியாஸ் தாங்கள் ஆய்வு செய்த கொலஸ்ட்ராலுக்கான மருந்து, கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் செல்வதைத் தடுத்துநிறுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆயினும் அவருடைய மருந்து இன்னும் நோயாளிகளுக்குப் பரிசோதிக்கப்படவில்லை.
இதனிடையே கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதற்காக சர்வதேச ரீதியாக கொரோனா மருந்து ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள GAVI என்ற அமைப்பில் பல ஏழை நாடுகள் இணைய ஒப்புதல் அளித்துள்ளன.
கொரோனா மருந்து தடையின்றி கிடைக்கவும் தங்கள் நாடுகளுக்குத் தேவையான கையிருப்பை வைத்திருக்கவும் இந்த ஒப்பந்தத்தில் பல நடுத்தர மற்றும் ஏழை நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.