உலக அளவில் கொரோனா தொற்றுக்கு குறைந்தது 3000 மருத்துவ பணியாளர்கள் பலியாகி இருக்கக்கூடும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இது குறைந்த பட்ச எண்ணிக்கை மட்டுமே என்றும், பல நாடுகள் இது போன்ற இறப்புக்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.
தங்களிடம் பதிவான விவரங்களின் படி மருத்துவ பணியாளர்களில், அதிகபட்சமாக ரஷ்யாவில் 545 பேரும், பிரிட்டனில் 540 பேரும், அமெரிக்காவில் 507 பேரும் கொரோனாவுக்கு பலியானதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவும் இந்த காலகட்டத்தில் நாடுகள், தங்களது மருத்துவ-சுகாதார பணியாளர்கள் மீது போதிய கவனம் செலுத்த வேண்டும் என அது கேட்டுக் கொண்டுள்ளது. தாங்கள் ஆய்வு நடத்திய 63 நாடுகளில் தனிநபர் பாதுகாப்பு கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் ஆம்னஸ்டி கூறியுள்ளது.