ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை, செச்செனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 18ம் தேதியன்று தன்னார்வலர்கள் மீது தொடங்கியது. இந்நிலையில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, ரஷ்யாவின் மாற்று மருத்துவம் (translational medicine)மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தன்னார்வலர்களின் முதல் குழு வரும் 15ம் தேதியும், இரண்டாவது குழு 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி உறுதி செய்யப்பட்டால், உலகளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனாவிற்கான முதல் மருந்தாக இது விளங்கும்.