கம்போடியாவில், உலகப்புகழ் பெற்ற அங்கோர் வாட் ஆலயம் அமைந்துள்ள சியெம் ரீப் மாகாணத்தில் நாய் இறைச்சி விற்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
காம்போடியா வரும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகள் நாய் இறைச்சியை விரும்பி உண்பதால், சியெம் ரீப் மாகாணத்தில் மட்டும் ஆண்டுக்கு 3 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, வீடுகள், விவசாய நிலங்கள் மட்டுமின்றி நாட்டையும் காக்க ராணுவத்தினருக்கும் உதவும் நாய்களை இறைச்சிக்காக கொல்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள கம்போடிய அரசு, நாய் இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.