இந்தோனேஷியாவில் ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை நொறுக்கின.
ஜாவா தீவில் உள்ள லெம்பேங் என்ற இடத்தில் சாலையோரத்தில் சுற்றித் திரிந்த குரங்குகளுக்கு அப்பகுதி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் உணவின்றி குரங்குகள் தவித்து வந்தன. இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமான குரங்குள் திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளின் ஓடுகளை நொறுக்கின.
சமையலறைக்குள் புகுந்த குரங்குகள் உணவுப் பொருட்களை அள்ளிச் சென்றன. இதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக லெம்பேங் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.