ஜப்பானில், வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்து வருகின்றனர்.
அடிக்கடி வெள்ளங்கள் ஏற்படும் குமமாட்டோ மாகாணத்தில், இம்முறை வெள்ளத்துடன் கொரோனா தொற்றும் தாக்கி வருவதால், அங்கு நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில், சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக, கார்டுபோர்டுகள் ((cardboard)) மூலம் தடுப்புகள் அமைத்து, 233 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு, தினமும் காலை வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.