சீனாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மத்திய, தென்மேற்கு மற்றும் கிழக்கு சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்டே ((Chengde))நகரத்தின் லிக்சியன் ((Lixian)) கவுண்டியில் உள்ள சென்ஷுய் ((Censhui))நதியில் அபாய அளவை காட்டிலும் 3.5 மீட்டர் அதிகமாக தண்ணீர் செல்வதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெங்சி ((Mengxi))டவுனில் வெள்ளத்தினால் வீடுகளில் சிக்கிய 2000 பேர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜியான்லி ((Jianli ))நகர சாலைகளில் வெள்ளநீர் தேங்கியநிலையில், சீசன் ((Ceshan))மலைக்கு அருகிலுள்ள ஜி -319 தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.