ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நடப்பாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கென்யாவில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு இரவு நேரத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர், ஜார்ஜ மாகோஹா விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று வரும் டிசம்பருக்குள் கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாகவும், இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அறிவித்துள்ளார். நடப்பாண்டு பள்ளி நாட்காட்டியில் இழந்த ஆண்டாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.