சீனாவை நம்ப முடியாது என பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab ) எச்சரித்துள்ளார்.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுவோரை சீனா அழைத்து வந்து விசாரணை நடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் மனித உரிமை மீறல்கள், ஊழலில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் (Magnitsky-style sanctions law) சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து பேசிய டொமினிக் ராப், ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டன் விதித்த நிபந்தனைகளை சீனா ஏற்றுக் கொண்டதாகவும், இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு பிறகு, சீனா சர்வதேச நிபந்தனைகளுக்கு கட்டுப்படுமா என பல்வேறு நாடுகளும் கேள்வி கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தின்கீழ் 25 ரஷ்ய நாட்டினர், 20 சவூதி நாட்டினர், 2 மியான்மர் ராணுவ ஜெனரல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.