அமெரிக்க கல்லூரிகளில் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட்டால், வெளிநாட்டு மாணவர்கள் அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் மோசமாக பாதிக்கப்படும் பட்டியலில் சீனாவை தொடர்ந்து இந்திய மாணவர்கள் இடம்பெறுவர் எனக் கூறப்படுகிறது. 2018-2019 கணக்கின்படி அமெரிக்காவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ளதால் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்துவதாக முடிவெடுத்துள்ள கல்லூரிகளை சேர்ந்த, வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை தவிர்க்க மாணவர்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் இருந்து, முறைப்படி மாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.