உலகம் முழுவதும் 38 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 மில்லியன் மக்கள் தங்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருவதாக ஐநாவின் எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹெச் ஐ வி நோய்க்கான கடந்த ஆண்டு அறிக்கையை ஐநா தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் அசாம், மிசோரம், மேகாலயா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் புதிய நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் தொடர்பான நிகழ்வுகளை விட போதைப் பொருளை ஊசி மூலம் உட்செலுத்துவதன் மூலமே இந்தியாவில் அதிகமாக எய்ட்ஸ் பரவுவதாக ஐநாவின் எய்ட்ஸ் ஒழிப்பிற்கான அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பியானிமா தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் நோய்க்கான நிதியை கொரோனாவுக்கு பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டுமானால் உலக நாடுகள் முழுமையாக நிதியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.