மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களில் எண்ணெய் கசிவு ஏற்படும் சாத்தியகூறு உள்ளதால் சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சத்து 68 ஆயிரம் வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உயர் அழுத்தம் கொண்ட எரிபொருள் குழாயில் காணப்படும் அடைப்பு, காலப்போக்கில் பழுதாகும் என்று தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சீனாவில் தயாரான C, E, V கிளாஸ் கார்கள் மற்றும் GLK, CLS, SLC மற்றும் GLC SUV உள்ளிட்ட கார்களை திரும்பப் பெற பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதில் பெரும்பாலான வாகனங்கள் பெய்ஜிங்கில் உள்ள பென்ஸ் ஆட்டோமேட்டிவ் கே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்நிலையில் எண்ணெய் கசிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் பகுதி இலவசமாகவே மாற்றித் தரப்படும் என்று பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.