கோவிட்-19 கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு அடுத்த வாரத்தில் சீனா செல்கிறது.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவியது, வவ்வால்களில் இருந்து நேரடியாகப் பரவியதா, வேறொரு விலங்கிற்கு பரவி பின்னர் மனிதர்களுக்கு பரவியதா என்பது குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் பரவியபோது, வவ்வால் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கொரோனாவும் நேரடியாகப் பரவியிருக்கலாம் அல்லது சார்ஸ் வைரஸ் போல வேறொரு விலங்கின் வழியாகவும் பரவியிருக்கலாம என அவர் தெரிவித்துள்ளார்.
வூகானில் நிமோனியா போன்ற நோய் பரவுவது குறித்து, டிசம்பர் 31-ல் சீனாவில் தெரிவிக்கப்பட்டது என்றும், அந்நாட்டில் உள்ள உலக சுகாதார நிறுவன அலுவலகம் ஜனவரி 1ஆம் தேதியே அதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் உஷார்படுத்தப்பட்டதாகவும் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவுவது குறித்து முதன் முதலில் தங்களை உஷார்படுத்தியது சீன அரசு அல்ல என்றும், சீனாவில் உள்ள தங்களது அலுவலகமே எச்சரித்தது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் எங்கு உருவானது என்பதை கண்டுபிடிக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனத்தின் குழு அடுத்த வாரம் செல்ல உள்ளனது.