சீன நிறுவனங்களுடன் வங்கிகள் வணிகம் மேற்கொள்வதைத் தண்டனைக்குரியதாக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்குப் பதிலடியாகச் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் ஹாங்காங்குக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.