சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய 100 க்கும் மேற்பட்ட கொலம்பிய வீரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் எட்வர்டோ சபாடீர் பேசும்போது, கொலம்பிய ராணுவத்தில் சுமார் 118 பேர் சிறார்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இவர்களில் 45 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 73 பேர் மீது விசாரணை நடந்து வருவதாகவும் சபாடீர் தெரிவித்துள்ளார். \
இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற ராணுவம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டினை அவர் மறுத்துள்ளார்.