கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 3 மாதங்களாக ஸ்பெயின் மற்றும் போர்சுகல் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இரு நாட்டு எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின் அரசர் பிலிப், போர்சுகல் அதிபர் Marcelo Rebelo, மற்றும் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து பொதுமக்கள் போக்குவரத்துக்காக எல்லைகளை திறந்து வைத்தனர்.
கொரோனா தொற்று பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்த போர்சுகல் பிரதமர் Costa, மீண்டும் ஒரு முறை எல்லைகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.