இத்தாலியில் 14 டன் எடையிலான போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சலேர்னோ துறைமுகத்தில், போலீசார் நடத்திய சோதனையில், ஏறத்தாழ 8,470 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கோடியே 40 லட்சம் Captagon போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
amphetamine-ஐ மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் Captagon போதை மாத்திரைகள் சிரியா, லெபானன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தாயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே போக்குவரத்து தடை பட்டதால், கடத்தல்காரர்கள் கப்பல் மூலம் சிரியாவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.