தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் க்ரைசோபிலியா பாராடிசி எனும் மர பாம்புகளால் (Chrysopelea paradisi -- the paradise tree snake) எப்படி பறந்து செல்ல முடிகிறது என்பது குறித்து அமெரிக்காவின் விர்ஜினியா டெக் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
தரையில் செல்வதை போல சில பாம்புகள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தாவி செல்வது, பறந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதனால் பாம்புகளால் பறக்க முடியுமா என கேள்வியெழுந்துள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் இன்டோரில் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் தரையில் பாம்பு ஊர்ந்து செல்கையில் வளைந்து வளைந்து செல்வது போல, காற்றிலும் பாம்புகள் வளைந்து செல்வதை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வளைந்து செல்வதால் சறுக்கி விழ வேண்டியிருக்காது என்பதால் பாம்பு இவ்வாறு செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, திறந்த இடம், மரம் ஆகிய இடங்களில் பாம்பைக் கொண்டு சோதனை நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.