ஈரான் மீதான ஆயுதக் கொள்முதல் தடையை நீட்டிக்க வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் மாதம் வரை உள்ள தடையை நீக்கினால் ஈரான் ரஷ்யா தயாரிப்பு போர் விமானங்களை வாங்கும் என்றும் 3 ஆயிரம் கிலோமீட்டர் வரை தாக்குதல் நடத்தலாம் என்றும் மைக் பாம்பியோ அச்சம் தெரிவித்துள்ளார்.
இதனால் புதுடெல்லி, ரியாத், ரோம், வார்சா போன்ற நகரங்கள் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முந்தைய அமெரிக்க அரசு நிர்வாகத்தின் குறைபாடுகள் காரணமாக முந்தைய அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறிய பாம்பியோ உலகின் மிகப்பெரிய தீவிரவாத அச்சுறுத்தலை ஈரான் ஏற்படுத்தி வருவதாக கூறினார்.