ஹாங்காங்கின் சுயாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ள சீனா அதனை திரும்பப்பெற வேண்டும் என்று ஐநா.சபையிடம் 27 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
புதிய பாதுகாப்பு சட்டம் மிகுந்த கவலை அளிப்பதாகவும், அங்குள்ள மக்களின் மனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. சீன அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஹாங்காங்கில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் சீனாவை உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.