அமெரிக்க மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், தென் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரசின் எழுச்சி மாறாவிட்டல், நோய்த்தொற்று மோசமாக மாறக் கூடும் என எச்சரித்துள்ளார். நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் இல்லை எனவும், தற்போது சராசரியாக நாள் ஒன்றிற்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில், இது ஒரு லட்சத்திற்கும் மேலாக உயர்ந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் மாஸ்க் அணிவதில்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.