சீனாவின் ஹூவேய் மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கான நிதியை நிறுத்துவதாக அமெரிக்காவின் நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களின் சப்ளைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில் சீன ராணுவம் மற்றும் உளவுத்துறையுடன் இவ்விரு நிறுவனங்களும் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தொலைத் தொடர்புகளை கட்டுப்படுத்தும் ஃபெடரல் கம்யூனிகேசன் கமிஷன் என்ற அமைப்பு அமெரிக்காவின்தொலைத் தொடர்பை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் தொலைத் தொடர்புக்கான நிதியை நிறுத்துவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.