உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் 42 லட்சத்து 33 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர்த்து கொரோனாவுக்கு 5 லட்சத்து 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த முதல் நாடாக அமெரிக்காவும், 2ம் நாடாக பிரேசிலும், 3ம் நாடாக ரஸ்யாவும், 4ம் நாடாக இந்தியாவும், 5ம் நாடாக பிரிட்டனும் உள்ளன. இதில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது.