செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை! சத்தமில்லாமல் இனபடுகொலையில் ஈடுபடும் சீன அரசு

Jun 30, 2020 03:32:45 PM

சீனாவில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த  சிறுபான்மை மக்களான உய்குர் இன மக்களின் பிறப்பு விகிதத்தைக் குறைத்து, அவர்களின் மக்கள் பெருக்கத்தை  கட்டுப்படுத்தும் நோக்கில் உய்குர் இன பெண்களுக்கு  கட்டாய கருத்தடையை சீன அரசு மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. AP செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வில் இந்தத் தகவல் அம்பலமாகியிருக்கிறது.

சீன அரசின் புள்ளி விவரங்கள், மாநில ஆவணங்கள், 30 - க்கும் மேற்பட்ட முன்னாள் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவில் உய்குர் இன பெண்களுக்குக் கட்டாயமாகக் கருத்தடை மேற்கொள்ளப்படுவது தெரிய வந்துள்ளது.   சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கட்டாய கருத்தடைகளை மேற்கொள்ளும் சீன அரசின் இந்த நடவடிக்கையை இனப்படுகொலை' என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். 



சிறுபான்மையின மக்கள் கருத்தரித்திருக்கிறார்களா என்பதை சீன அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன நாட்டில் பரவலாகக் கருக்கலைப்பு குறைந்து வந்தாலும் ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை நேர் மாறாகத்  அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் இனத்தில் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். குழந்தை பெற்றுக்கொண்டால் கட்டாயமாக அபராதம் விதிக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள் தனி விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று காவலர்களும் ராணுவ அதிகாரிகளும் மறைந்திருக்கும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் என்றும் ஏ.பி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது. 


ஜின்ஜியாங் மாகாணத்தில் குல்னார் ஓமிர்சாத் என்ற பெண் மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். பின்னர்,  அரசு கட்டாயமாக அவருக்கு  IUD கருத்தடை சாதனத்தை பொருத்தியுள்ளது  இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018 - ம் ஆண்டில் நான்கு ராணுவ அதிகாரிகள் வந்து குல்னார் வீட்டைத் தட்டி மூன்று நாள்களுக்குள் 2685 அமெரிக்க டாலர்கள்  அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்தப் பணத்தைச் செலுத்த முடியாததால் அந்த பெண்ணின் கணவர் வதை முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். 

"கடவுள் தான் நமக்குக் குழந்தைகளைக் கொடுக்கிறார். அதைத் தடுப்பது தவறு. சீனர்கள் எங்களையும் எங்கள் மக்கள் முழுவதையும் அழிக்கப் பார்க்கிறார்கள்" என்று கண்ணீரோடு கூறுகிறார் குல்னார்.

சீன அரசின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் உய்குர் இன மக்களின் குழந்தை பிறப்பு விகிதம் 2015 - 2018 ம் ஆண்டில் மட்டும் 60 % குறைந்துள்ளதுசீனாவின் உய்குர் இன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் உய்குர் மக்கள் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான மசோதாவுக்குக் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...

 


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement