அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான ஈரானின் பிடியாணையை இன்டர்போல் நிராகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரானின் முக்கிய ராணுவ தளபதியான சுலைமானி கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, ஈரான் அரசு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. சுலைமானியையும், அவருடன் இருந்தவர்களையும் துல்லிய தாக்குதல் மூலம் கொல்ல டிரம்ப் உத்தரவிட்டதாக அவர் மீதும் மேலும் 30 பேர் மீதும் கொலை மற்றும் தீவிரவாத குற்றங்களை ஈரான் சுமத்தியுள்ளது.
இதனால் டிரம்புக்கு எதிராக கைது வாரண்டை பிறப்பித்துள்ள ஈரான், டிரம்பை பிடிக்க உதவுமாறு இன்டர்போலுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், டிரம்ப்பை கைது செய்வதற்கான முகாந்திரம் இல்லாததால், ஈரானின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இன்டர்போல் தெரிவித்துள்ளது.