இலங்கையில் படிப்படியாக பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 3 மாதங்களுக்கு பிறகு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இம்மாதத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில், நோய் பரவல் வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டதாக கூறி ஊரடங்கு உத்தரவை அரசு முழுவதும் ரத்து செய்துள்ளது.
முதற்கட்டமாக பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், ஊழியர்கள் வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 6 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து 3 கட்டமாக மாணவர்களின் கிரேட் அடிப்படையில் பள்ளியை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.