உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 54 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணமாகி உள்ளனர்.
இதுதவிர்த்து பல்வேறு நாடுகளிலும் 41 லட்சத்து 29 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். உலகில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்து 96 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
2ம் இடத்திலுள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்து 19 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 57 ஆயிரமாகவும், 3ம் இடத்திலுள்ள ரஸ்யாவில் பாதிப்பு 6 லட்சத்து 34 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 9 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.