அல்கொய்தா இயக்கத் தலைவன் பின்லேடனை, இஸ்லாமிய தியாகி என்று அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன.
நாடாளுமன்றத்தில் வீடியோ மூலம் உரைநிகழ்த்திய அவர், பாகிஸ்தான் அரசின் அனுமதி பெறாமலேயே அமெரிக்க படையினர் புகுந்து பின்லேடனை தாக்கி கொன்றுவிட்டதாகவும், இது மிகப்பெரிய அவமதிப்பு என்றும் குறிப்பிட்டார்.
தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்திற்கு பாகிஸ்தான் உதவியதாகவும், இதனால் பல உயிர்களை இழந்த போதும் உலகம் முழுவதும் பாகிஸ்தானையே சந்தேகக் கண் கொண்டு பார்த்து அவமதிப்பு செய்வதாக இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்நிலையில் உலகம் அறிந்த ஒரு பயங்கரவாதியை தியாகி போல் இம்ரான் கான் குறிப்பிட்டு பேசியதற்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரும் கண்டங்களைத் தெரிவித்துள்ளனர்.