மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியும், பயங்கரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானின் அரசு பாதுகாப்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதிகள் மசூத் அசார் மற்றும் சஜித் மிர் ஆகியோர் மீது வழக்குத் தொடர பாகிஸ்தான் அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி நெட்வொர்க், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பு உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளிப்பதாக அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் தீவிரவாத்தைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் ஓரளவு முனைப்பு காட்டி வருவதாகவும், ஆனால் பாகுபாடு இல்லாமல் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் அழிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.