செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

'மக்களை வீட்டுக்குள் முடக்குவதை விடவும் வெயிலில் நடமாட விட்டால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும்' - விஞ்ஞானிகள்!

Jun 24, 2020 04:20:36 PM

லிமை வாய்ந்த புற ஊதாக் கதிர்கள் 90% கோவிட் - 19 வைரஸ் கிருமியை அழிக்கும் என்று வைராலஜிஸ்ட்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். புற ஊதாக் கதிர்கள் அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் சளி, இருமல் துளிகளில் உள்ள கொரோனா வைரசை அழிக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்படுவதால் கோடைக்காலத்துக்குள் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தைத் தொடும் என்று எச்சரித்திருக்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், நோய்த் தொற்று பரவல் குறித்த பயத்தைப் போக்கும் விதமாக, சளி - இருமல் துளி ஆகியவற்றின் புறப்பரப்புகளில் உள்ள 90 % கோவிட் வைரசை சூரியக் கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்கள் அழிக்கும் என்று ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்ட வைராலஜிஸ்ட் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.



வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சூரிய ஒளி கொரோனா வைரசை மொத்தமாக அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் பட்டால் ஆறு நிமிடத்தில் வைரஸ் மொத்தமாக அழிந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளியே செல்வது குறித்த பயத்தைப் போக்கும் விதத்தில், மக்களை வெளியே நடமாட அனுமதிப்பதை விடவும் லாக்டவுனில் வீட்டுக்குள் முடக்கி வைப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வெளியே நடமாடும்போது சூரிய ஒளி மூலம் நமது உடலில் உருவாகும் வைட்டமின் - D நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிக வீரியத்துடன் செயல்படவைக்கும் என்று நம்புவதாக வைராலஜி நிபுணர்கள் அமெரிக்க ராணுவம், உணவு மற்றும் மருத்துத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்க தேசிய உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், "90 % கொரோனா வைரஸ் கோடைக்கால சூரிய வெளிச்சத்தில் ஆறு நிமிடத்திலும், குளிர்கால சூரிய வெளிச்சத்தில் 19 நிமிடத்திலும் சிதைவுறுகிறது" என்று கண்டறியப்பட்டுள்ளது.



இதே போன்று ஹார்வார்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வறண்ட வானிலையில் ஆறு டிகிரி வெப்பத்தில் ப்ளூ உள்ளிட்ட வைரஸ்கள் 23 மணி நேரமும்; 32 டிகிரி வெப்பத்தில் ஒரு மணி நேரமும் உயிர் வாழ்கின்றன என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால், சில ஆய்வாளர்கள் சூரிய வெளிச்சத்தில் கொரோனா வைரஸ் விரைவில் அழியும்; சூரிய வெளிச்சம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.  நுண்ணுயிரியலாளர் டாக்டர். கிளார்க் , "கோடைக்கால சூரிய வெளிச்சம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்றால் சிங்கப்பூர், பிரேசில், புளோரிடா உள்ளிட்ட வெப்ப மண்டல பகுதிகளில் ஏன் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்...

 
 


Advertisement
இஸ்ரேல் தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய ஐநா சுகாதார அமைப்பு தலைவர்
மெக்சிகோ சிட்டியில் மிதி வண்டியில் பள்ளிக்கு செல்வதற்கு ஏற்பாடு
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
மெக்சிகோ சிறையில் கைதிகளின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்
ஜமைக்காவில் கொள்ளை சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழப்பு..
ஜப்பானில் விண்ணில் செலுத்தப்பட்ட 10-வது நிமிடத்தில் செயலிழப்பு செய்யப்பட்ட ராக்கெட்
பிரேசில்லில் கடல் வழியே ஜெட் ஸ்கீ பைக்கில் வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய சாண்டா கிளாஸ்
பிரான்சின் மாயோட்டில் வீசிய சிடோ சூறாவளிப்புயல்.. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க கூடும் என அச்சம்
சிரியா விவகாரம் குறித்து டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை
சிலியில் முதன்முறையாக காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்

Advertisement
Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பணத்தை திருப்பி கேட்பியா..? முன்னாள் காதலிக்கு ஸ்கெட்ச் காரை ஏற்றிய அதிர்ச்சி காட்சிகள்..! சீட்டிங் லவ்வர் பாய் கைது

Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அதெப்படி ஏரோபிளேன் மோடில் இருந்தால் செல்போன் அழைப்பு வரும் ? மாணவி சொன்ன அந்த சார் யாரு ? புலன் விசாரணையில் அம்பலமாகுமா ?

Posted Dec 27, 2024 in வீடியோ,Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!


Advertisement